TNPSC Thervupettagam

டா வின்சி ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பு

September 17 , 2025 16 hrs 0 min 18 0
  • டா வின்சி தானியக்க/ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பில் பயிற்சி அளிக்கும் இந்தியாவின் முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக புது டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்) மாறியது.
  • டா வின்சி தானியக்க அறுவை சிகிச்சை அமைப்பானது எய்ம்ஸ் நிறுவனத்தின் திறன்கள், இணையக் கற்றல் மற்றும் தொலை மருத்துவ வசதி (SET) மையத்தில் திறக்கப் பட்டது.
  • இந்த தானியக்கத் தளத்தை Intuitive Surgical  நிறுவனம் வழங்கியது.
  • இந்தியாவில் பயிற்சிக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு தானியக்க / ரோபோடிக் அமைப்புகளைக் கொண்ட ஒரே நிறுவனம் எய்ம்ஸ் ஆகும்.
  • தானியக்க/ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பயிற்சியானது சிறுநீரகவியல், மகளிர் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை போன்ற நிபுணத்துவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்