டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் 2024
June 2 , 2024
343 days
433
- இந்திய அமைதி காப்பாளர் நாயக் தனஞ்சய் குமார் சிங் அவர்களுக்கு டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் (மரணத்திற்கு பின்) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
- அவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (MONUSCO) ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப் படுத்தல் திட்டத்தில் பணியாற்றினார்.
- நாயக் சிங் இராணுவ வீரர்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கச் செய்வதைக் கையாள்கின்ற இராணுவ மருத்துவப் படையின் ஓர் அங்கத்தினராக இருந்தார்.
- ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் படைக்கான சீருடைப் பணியாளர்களின் பங்களிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இந்தியா தற்போது 6,000க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் காவல் பணியாளர்களை ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.

Post Views:
433