டாக்டர் M.S. சுவாமிநாதன் நூற்றாண்டு மாநாடு
August 12 , 2025
3 days
66
- டாக்டர் M.S. சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு ஆனது புது டெல்லியில் உள்ள ICAR PUSA எனுமிடத்தில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டின் கருத்துரு, "Evergreen Revolution – The Pathway to Bio happiness" என்பதாகும்.
- டாக்டர் சுவாமிநாதனின் நினைவாக ஒரு சிறப்பு நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- M.S. சுவாமிநாதன் அவர்கள் 'இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.
- அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் அரிசி வகைகளை உருவாக்குவதில் நார்மன் போர்லாக் உடன் இணைந்து பணியாற்றினார்.
- குறிப்பிடத்தக்க வகையில், பகுதியளவு வளர்ச்சி குன்றிய கோதுமை வகைகள் ஆனது 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இந்திய வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்தின.
- 1987 ஆம் ஆண்டில் அவருக்கு முதல் உலக உணவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Post Views:
66