பாரத ரத்னா டாக்டர் பூபன் ஹசாரிகா தேசிய விருதுகள் அசாமின் கௌஹாத்தியில் வழங்கப் பட்டன.
இலக்கியம், இசை, திரைப்படம் மற்றும் பாரம்பரியத்திற்கானப் பங்களிப்புகளுக்காக வடகிழக்கைச் சேர்ந்த யேஷே டோர்ஜி தோங்சி, லைஷ்ராம் மேமா, ரஜினி பாசுமதரி, L. R. சைலோ, டாக்டர் சூர்ஜ்யா காந்தா ஹசாரிகா மற்றும் பேராசிரியர் டேவிட் R. சியெம்லி உள்ளிட்ட ஆறு கலாச்சார பிரமுகர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஒற்றுமை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் மரபைக் கொண்டாடியது.
பூபன் ஹசாரிகா (1926–2011) அசாமைச் சேர்ந்த ஓர் இந்தியப் பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.