TNPSC Thervupettagam

டாக்டர் ஹர்ஷ் வர்தன் – Stop TB Partnership வாரியத்தின் தலைவர்

March 19 , 2021 1586 days 595 0
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Stop TB Partnership) காசநோயை ஒழிப்பதற்கான பங்குதார வாரியத்தின்தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இப்பொறுப்பு 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிப்பதற்காக அவர் மேற்கொண்டு வரும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப் பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 3 வருடங்களுக்கு இந்த உலக அமைப்பிற்கு அவர் தலைமையேற்றுப் பணி புரிவார்.
  • இது ஒரு சர்வதேச அமைப்பாகும். இது காசநோய்க்கு எதிராக போராடுவதற்காக பல நாடுகளை ஒன்று திரட்டும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
  • இந்த அமைப்பு “காசநோய் இல்லாத உலகம்” எனும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்