டாக்ஸிங் விமான நிலையம் - பெய்ஜிங்கின் மிகப்பெரிய விமான நிலையம்
September 20 , 2019 2135 days 841 0
கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சீனாவானது புதிய பெரிய விமான நிலையத்தை திறக்கவுள்ளது.
பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே இருக்கும் உலகின் இரண்டாவது பரபரப்பான பெய்ஜிங் விமான நிலையத்தோடுச் சேர்த்து கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.
பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையம் ஆனது 2018 இல் 100 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையம் அட்லாண்டாவில் உள்ளது.
டாக்ஸிங் விமான நிலையத்தின் வடிவத்திற்கு ‘ஸ்டார்ஃபிஷ்’ என்று புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பானது பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வாயில்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைக்கிறது.
பூகம்பத்தால் பாதிக்கப்படாத இந்த விமான நிலையத்தின் அடியில் ஒரு ரயில் நிலையமும் அமைந்துள்ளது.