பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு டாய்கத்தான் எனும் நிகழ்வின் பங்கேற்பாளர்களுடன் காணொலி வாயிலாக உரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பொருளாதாரத்தில் பொம்மைகள் மற்றும் விளையாட்டுத் தொழில்துறையின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
பொம்மைகள் மற்றும் விளையாட்டுத் தொழில்துறையினை அவர் ‘டாய்கானமி’ என அழைத்தார்.
டாய்கத்தான் – 2021
இது கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், நெசவுத் தொழில்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் நாளன்று தொடங்கப்பட்டது.
இந்தியாவை ஓர் உலகளாவிய அளவிலான பொம்மைத் தயாரிப்பு மையமாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.