டாலர்/ரூபாய்க்கான 2 ஆண்டுகால விற்பனை /கொள்முதல் பரிமாற்ற ஏலம்
February 26 , 2022 1325 days 614 0
இந்திய ரிசர்வ் வங்கியானது டாலர்/ரூபாய்க்கான ஒரு 2 ஆண்டு கால அளவிலான விற்பனை/கொள்முதல் பரிமாற்ற ஏலத்தினை அறிவித்துள்ளது.
தனது முன்னோக்கு ஒப்பந்தங்களின் இறுதிநிலை வரம்பை நீட்டித்தல் மற்றும் எதிர் காலச் சொத்துகள் தொடர்பான சில வரவுகளை மிதப்படுத்தச் செய்தல் ஆகிய சில நோக்கங்களுடன் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
மத்திய வங்கியானது சந்தையில் ஈடுபடுபவர்கள் அதிகளவில் ஈடுபடச் செய்யும் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான, 2 ஆண்டுகால டாலர்/ரூபாய் விற்பனை/கொள்முதல் பரிமாற்ற ஏலத்தினை மேற்கொள்ள உள்ளது.
இந்தப் பரிமாற்ற ஏலத்தின் கீழ், ஒரு வங்கியானது அமெரிக்க டாலர்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் விற்கும்.