TNPSC Thervupettagam

டால்பின் நண்பர்கள் முன்னெடுப்பு

April 26 , 2026 7 days 82 0
  • அழிந்து வரும் கங்கை நதி டால்பினைப் பாதுகாக்கும் நோக்கில் 'டால்பின் நண்பர்கள்' என்ற தன்னார்வலர் வலையமைப்பை பிரயாக்ராஜில் உள்ள வனத்துறை தொடங்கி உள்ளது.
  • இது நதிகளில் டால்பின்களின் நடமாட்டம், இனப்பெருக்கம் மற்றும் வாழ்விட நிலைமைகளை கண்காணிக்க கொண்டு வரப்பட்ட ஒரு சமூகம் சார்ந்த முன்னெடுப்பு ஆகும்.
  • இனப்பெருக்க காலத்தின் போது (பருவமழை) டால்பின்களைப் பாதுகாப்பதும், உள்ளூர் மக்களின் பங்களிப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • அறிவியல்ரீதியான கண்காணிப்பில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், மீனவர்களும் படகோட்டிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
  • இந்த முன்னெடுப்பு ஆனது டால்பின் திட்டம் போன்ற திட்டங்களை ஆதரிக்கிறது மற்றும் நதி சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாக டால்பின்களை முன்னிலைப் படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்