டிஆர்டிஓ-வின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மையங்கள்
September 23 , 2020 1799 days 706 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) எதிர்கால இராணுவப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 8 மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மையங்களை அமைக்கின்றது.
இந்த மையங்கள் இராணுவப் பயன்பாடுகளுக்காக முக்கியமான பகுதிகளில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வேண்டி கல்வி மையங்களுக்கு உதவ இருக்கின்றது.
தற்பொழுது DRDO நாடு முழுவதும் 50 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.
இவை விண் பயணம் பற்றிய அறிவியல், ஆயுதங்கள், போர் வாகனங்கள், பொறியியல் அமைப்புகள், ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட கணினி அறிவியல் மற்றும் கப்பல் அமைப்புகள் போன்ற துறைகளை உள்ளடக்கிய வளர்ந்து வரும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் பங்கெடுக்கும்.