பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்க இருக்கின்றது.
இது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
இந்த ஆராய்ச்சிப் பிரிவானது சென்னையில் உள்ள DRDO ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் நீட்டிப்பாக தொடங்கப்பட இருக்கின்றது.