டிஎன்ஏ தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா 2019
July 28 , 2023 726 days 340 0
2019 ஆம் ஆண்டு DNA தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதாவினை அரசாங்கம் மக்களவையில் இருந்து திரும்பப் பெற்றது.
இந்த மசோதாவானது, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மக்களவையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
பின்னர் அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவானது, மூன்று முதன்மை நோக்கங்களைக் கொண்டிருந்தது.
முதலாவது, டிஎன்ஏ விவரக் குறிப்பு வாரியத்தினை இதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக நிர்ணயிப்பதற்கு முற்பட்டது.
டிஎன்ஏ தரவு வங்கிகள் எனப்படுகின்ற, குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடமிருந்துச் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ தகவல்களைச் சேமித்து வைப்பதற்கான தரவுத் தளங்களை உருவாக்கவும் இந்த மசோதா முற்பட்டது.
இந்தத் தரவுத்தளமானது, குற்றம் நடந்த இடங்களிலிருந்து பெறப்பட்ட பொருத்தமிக்க மாதிரிகளைத் தரவரிசைப் படுத்தித் தேட உதவும் வகையில் அமைக்கப்பட இருந்தது.
மூன்றாவதாக, குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிப்பதை எளிதாக்க முற்பட்டது.