2025 ஆம் ஆண்டு நல்லாட்சி தினத்தன்று மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஐந்து டிஜிட்டல் ஆளுகை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
இந்தச் சீர்திருத்தங்கள் அரசு அலுவலகங்களில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அரசு ஆட்சேர்ப்பு விதிகளைத் தானியக்கமாக்க AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கும் ஆட்சேர்ப்பு விதிகள் உருவாக்க கருவி அறிமுகப் படுத்தப்பட்டது.
ஊழியர் மனிதவளப் பணிகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க eHRMS (பணியாளர் மனிதவள மேலாண்மை அமைப்பு) 2.0 கைபேசி செயலி தொடங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு அதிக அளவிலான இயங்கலை வழி கற்றல் மூலங்களை வழங்குவதற்காக iGOT (ஒருங்கிணைந்த அரசு இயங்கலைப் பயிற்சி) கர்மயோகி வலை தளம் மேம்படுத்தப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கான ஊடாடும் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை ஆதரிப்பதற்காக கர்மயோகி டிஜிட்டல் கற்றல் ஆய்வகம் 2.0 தொடங்கப்பட்டது.
முன்னாள் இராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் செயல் படுத்துதலை வழி நடத்துவதற்காக முன்னாள் இராணுவ வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தொகுப்பு (ESM) வெளியிடப்பட்டது.