TNPSC Thervupettagam

டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு முகமைகள்

September 4 , 2025 19 days 46 0
  • இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது எட்டு நிறுவனங்களை எண்ணிம/டிஜிட்டல் தகவல் தொடர்பு இணைப்பு மதிப்பீட்டு முகமைகளாக (DCRAs) பதிவு செய்துள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான கட்டமைப்புகளின் மதிப்பீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் பதிவுகள் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று வழங்கப்பட்டன என்ற நிலையில் இது அதன் விதிமுறைகளுக்கு இணங்க, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
  • பதிவு செய்யப்பட்ட எட்டு DCRA நிறுவனங்களில் Ardom Towergen, Crest Digitel, CTL Infocom, ESTEX Telecom, Frog Cellsat, Phistream Consulting, Shaurrya Teleservices மற்றும் TUV SUD South Asia ஆகியவை அடங்கும்.
  • இந்த நிறுவனங்கள் கட்டிடங்களில் உள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பை மதிப்பிடும் மற்றும் TRAI ஆணையத்தினால் வெளியிடப்பட்ட தரப்படுத்தப்பட்ட முறையின் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கும்.
  • இந்த மதிப்பீடுகள் ஆனது ஒளியிழைகள் தயார்நிலை, கைபேசி மற்றும் Wi-Fi பரவல், பிராட்பேண்ட் சேவையின் வேகம் மற்றும் ஒட்டுமொத்த டிஜிட்டல் பயனர் அனுபவம் போன்ற அளவுருக்களின் அடிப்படையில் அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்