டிஜிட்டல் இணையமேடை மீதான சிறந்த கார்பரேட் சொசைட்டி
May 7 , 2018 2571 days 855 0
2018-ஆம் ஆண்டிற்கான வங்கியியல், நிதியியல் சேவைகளுக்கான, மற்றும் காப்பீட்டு தலைமைத்துவ விருதுகளில் {Banking, Financial services and Insurance (BFSI) leadership Awards 2018} டிஜிட்டல் இணையமேடை மீதான சிறந்த கூட்டுறவுச் சங்க விருதினை (Best Co-operative Society on digital platform) ஆதர்ஷ் கிரெடிட் நிறுவனம் (Adarsh Credit) வென்றுள்ளது.
தன்னுடைய உறுப்பினர்களுக்குக் காகிதப் புழக்கமற்ற நிதியியல் சேவைகளை (paperless financial services) வழங்குவதற்காக மின் – கையெழுத்து (e-sign) வசதியை ஆதர்ஷ் கிரெடிட் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
இத்தொடக்கமானது டிஜிட்டல் மயமாக்கலை மேலும் ஊக்குவிக்கும். மேலும் இது ரொக்கமல்லாத பொருளாதாரத்தை (cashless economy) நோக்கிய ஓர் முக்கிய அடியாகும்.
மேலும் ஆதர்ஷ் கிரெடிட் நிறுவனமானது டிஜிட்டல் முறையில் நிதியியல் சேவைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கமாகும் (credit co-operative society).
மேலும் இந்த 2018-ஆம் ஆண்டிற்கான BFSI தலைமைத்துவ விருதுகளை மேக்ஸ் குப்தா சுகாதார காப்பீட்டு நிறுவனம், VMware, SREI மற்றும் தேசிய தகவல் மையம் (National Informatics Center) ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களும் பெற்றுள்ளன.