டிஜிட்டல் இந்தியா RISC-V (DIR-V) என்ற திட்டத்தினைத் தொடங்க உள்ளதாக இந்திய அரசு அறிவித்தது.
இந்திய நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலத்திற்காக நுண்செயலிகளை உருவாக்கும் ஒரு நோக்கத்துடன் இத்திட்டமானது அறிவிக்கப்பட்டது.
அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் கொண்ட நுண்செயலிகளுக்கான வடிவமைப்பு மற்றும் தொழில்துறை தரத்திற்கான வணிக ரீதியான சிலிக்கான் ஆகிய இலக்குகளை அடைவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.