டிஜிட்டல் இந்தியா நிலப்பதிவுகளை நவீனமாக்கல் திட்டம்
September 17 , 2021 1434 days 780 0
இது நிலவளத்துறையினால் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் திட்டமாகும்.
3 மாநிலங்கள் தவிர பெரும்பாலான மாநிலங்கள் தங்களது நிலப்பதிவுகளை மத்திய அரசின் இணையதளத்தில் ஒருங்கிணைக்கின்றன என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்திய உணவுக் கழகம் என்ற தலைமை கொள்முதல் நிறுவனத்துடன் தங்களது டிஜிட்டல் நிலப்பதிவுகளை ஒருங்கிணைத்த மூன்று மாநிலங்களாவன: அசாம், உத்தரகாண்ட்மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியன ஆகும்.
கொள்முதல் செய்வதற்கு முன்பாக நிலப்பதிவுகளைச் சரிபார்ப்பது என்பது குறைந்த பட்ச ஆதார விலைப் பயன் என்பது வணிகர்களை அல்லாமல் சரியான விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய உதவும்.
விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலோ அல்லது குத்தகை நிலத்திலோ பயிரிடப் படும் பயிரானது அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்படும்.