TNPSC Thervupettagam

டிஜிட்டல் காலநிலை வரைபடம்

January 28 , 2026 4 days 49 0
  • காலநிலை சார்ந்த சவால்களை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக, இந்திய அரசு இந்திய விவசாயத்தில் காலநிலை தழுவல் வரைபடத்தை (ACASA-இந்தியா) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) தலைமையிலான தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்பு (NARES) மற்றும் சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தின் (CIMMYT) கீழ் உள்ள போர்லாக் தெற்காசிய நிறுவனம் (BISA) ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இந்தத் தளம், அமைவிடம் சார்ந்த, தரவு அடிப்படையிலான வழிகாட்டுதலைக் கால நிலை தாங்குதிறன் கொண்ட விவசாய மேம்பாட்டிற்காக வழங்குகிறது.
  • ACASA-இந்தியா வழங்கும் நுண்ணறிவுகள், காலநிலை இடர் குறைப்பு மற்றும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான எதிர்கால முதலீடுகள் குறித்து முடிவெடுக்க அரசாங்க நிறுவனங்களுக்கு உதவும்.
  • காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்திய விவசாயத்தை வலுப்படுத்தும் நோக்குடன், தேசிய காலநிலை மீள்திறன் விவசாயத் திட்டமானது (NICRA) 2011 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் (ICAR) தொடங்கப்பட்டது.
  • காலநிலை தாங்குதிறன் கொண்ட விவசாயம் (CRA) என்பது, வறட்சி, வெள்ளம் மற்றும் தீவிர வானிலை போன்றப் பாதிப்புகளை விவசாய அமைப்புகள் தாங்கி, விரைவாக மீண்டு வர உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில் சுமார் 57% பேர் விவசாயத்தையே சார்ந்துள்ளனர் என்பதோடு மொத்த சாகுபடிப் பரப்பில் சுமார் 51% மழைநீரை நம்பியே உள்ளது என்ற நிலையில் இது காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படக் கூடியதாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்