TNPSC Thervupettagam

டிஜிட்டல் கிராம குருவாரா

December 27 , 2019 2029 days 763 0
  • மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் “டிஜிட்டல் கிராம குருவாராவைத்” திறந்து வைத்தார்.
  • இந்தத் தொடக்க விழாவின் போது, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து கிராமங்களுக்கும் இலவச வைஃபை (அருகலை) சேவைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
  • பாரத்நெட் என்ற திட்டத்தின் கீழ் இலவச வைஃபை (அருகலை) சேவைகள் அறிவிக்கப் படுகின்றன.

பாரத்நெட் திட்டம்

  • இந்த முயற்சியானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • கிராமப் புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எதிர்காலத்தில் இணையத்தின் வேகத்தை சுமார் 2 முதல் 20 Mbps வரை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டமானது ஒரு தேசிய ஒளியியல் இழை அமைப்புத் திட்டமாகும்.
  • டிஜிட்டல் இந்தியா வெற்றி பெறுவதற்கு இது ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப் படுகின்றது.
  • இது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்