TNPSC Thervupettagam

டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையம்

September 26 , 2026 6 days 83 0
  • கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையத்தை (DCC) இந்திய அரசு கலைத்தது.
  • DCC முதலில் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொலைத்தொடர்பு ஆணையமாக நிறுவப்பட்டது மற்றும் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் DCC என மறுபெயரிடப் பட்டது.
  • இது தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு கொள்கை மற்றும் நிர்வாக விஷயங்களுக்கான உச்சபட்ச துறைகளுக்கிடையேயான அமைப்பாக இருந்தது.
  • மத்திய அமைச்சரவை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று இதனை கலைக்க ஒப்புதல் அளித்தது. மேலும் அரசு தீர்மானம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • DCC உறுப்பினர்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆலோசகர்களுக்கு இடையிலான ஒன்றுபடுதல் மற்றும் முக்கியப் பணியிடங்கள் காலியாக இருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்