TNPSC Thervupettagam

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025

November 18 , 2025 10 days 72 0
  • இந்திய அரசானது 2023 ஆம் ஆண்டு DPDP சட்டத்தின் செயல்பாட்டினை நிறைவு செய்து, 2025 ஆம் ஆண்டு DPDP விதிகளை அறிவித்தது.
  • டிஜிட்டல் ரீதியான தனிப்பட்ட தரவை பொறுப்புடன் பயன்படுத்துவதற்காக குடி மக்களை மையமாகக் கொண்ட மற்றும் புதுமைக்கு ஏற்ற கட்டமைப்பைச் சட்டம் மற்றும் விதிகள் உருவாக்குகின்றன.
  • இது SARAL வடிவமைப்பு, அதாவது எளிமையான, அணுகக்கூடிய, ஏற்புடைய மற்றும் செயல்படக்கூடிய வடிவமைப்பை பின்பற்றி தரவுச் செயலாக்க அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கான உரிமைகளுக்கான (தரவுகளுக்கு உரிமையானவர்கள்) கடமைகளை நிறுவுகிறது.
  • ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, நோக்க வரம்பு, தரவுக் குறைப்பு, துல்லியம், சேமிப்பக வரம்பு, பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஏழு முக்கிய கொள்கைகள் கட்டமைப்பை வழிநடத்துகின்றன.
  • இந்த விதிகள் தனிப்பட்ட தரவை அணுக, திருத்த, புதுப்பிக்க அல்லது அழிப்பதற்கான தனிநபர்களின் உரிமைகளை வலுப்படுத்துகின்றன என்பதோடு மேலும் இவை இதற்கான பிரதிநிதிகளை நியமிக்கவும் அனுமதிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்