இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்திற்கான சில்லறை கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணைய வழி ரூபாய் என்று அழைக்கப்படுகின்ற டிஜிட்டல் நாணயம் ஆனது மத்திய வங்கி டிஜிட்டல் நாணய (CBDC) சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சில்லறை CBDC சோதனைத் திட்டமானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கியது, மேலும் இது இந்தியாவில் சுமார் 7 மில்லியன் பயனர்களைச் சென்று அடைந்துள்ளது.
கட்டமைப்பு/சாண்ட்பாக்ஸ் ஆனது நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்கள் இணைய வழி ரூபாயைப் பயன்படுத்தி தீர்வுகளை உருவாக்கி அதனைப் பரிசோதிக்க அனுமதிக்கிறது.
பாதுகாப்பான மற்றும் திறம் மிக்கப் பரிவர்த்தனைகளுக்காக உண்மையான வங்கி வைப்புகளை டிஜிட்டல் குறியீடுகளாக மாற்ற குறியாக்கம் பயன்படுத்தப்படுகிறது.