குஜராத் மாநில அரசானது e-Dhara, iORA வலைதளம் மற்றும் கார்வி 2.0 போன்ற முன்னெடுப்புகள் மூலம் டிஜிட்டல் நில நிர்வாகத்தில் தேசியத் தலைமைத்துவத்தினை எட்டியுள்ளது.
இது 35க்கும் மேற்பட்ட இயங்கலை வழி குடிமக்கள் சேவைகளை வழங்குகிறது.
கிராமப்புற நில உரிமைக்காகவும் நிலத் தகராறுகளைக் குறைக்கவும் SWAMITVA போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அந்த மாநில அரசானது உள்நாட்டுத் தொழில் நுட்பத்தை (BISAG, ISRO, NIC மூலம்) பயன்படுத்துகிறது.
பேரிடர் பாதிப்புக்குள்ளான கடலோர மாநிலமாக, தேசியப் புயல் அபாயக் குறைப்பு திட்டத்தின் கீழ் 76 புயல் நிவாரணத் தங்குமிடங்களை கட்டி, குஜராத் மாநிலம் சுழிய எண்ணிக்கையிலான உயிரிழப்பு உத்தியை ஏற்றுக் கொண்டது.
ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, நிலச் சீர்திருத்தங்களைப் பேரிடர் மேலாண்மையுடன் இணைத்து, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் இலக்குகளுடன் இணைகிறது.