டிஜிட்டல் பண வழங்கீடு மோசடி கண்டறிதல் தளத்தை அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (BoB) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய டிஜிட்டல் பண வழங்கீட்டு நுண்ணறிவுக் கழகம் (IDPIC) என்ற புதிய நிறுவனம் மூலம் இந்தத் தளம் நிறுவப்படும்.
IDPIC ஆனது, 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 8 ஆம் பிரிவு நிறுவனமாக பதிவு செய்யப்படும்.
பொதுத்துறை வங்கிகளில் டிஜிட்டல் பண வழங்கீட்டுப் பரிவர்த்தனைகளில் மோசடியைக் கண்காணித்துகே கண்டறிவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
நிதிச் சேவைகள் துறை (DFS) 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி வரை SBI மற்றும் BoB வங்கிகளுக்குப் பங்குதாரர் உரிம வரம்புகளிலிருந்து விலக்கு அளித்தது.