டிஜிட்டல் பண வழங்கீட்டுக் குறியீடு
February 12 , 2020
1971 days
671
- 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் டிஜிட்டல் பண வழங்கீட்டுக் குறியீட்டை உருவாக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- நாட்டில் பணப் பரிமாற்றங்களின் டிஜிட்டல்மயமாக்கத்தைக் கண்காணிப்பதே இந்தக் குறியீட்டு உருவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
- டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை கண்காணிப்பதற்காக, மத்திய வங்கியானது டிஜிட்டல் பண வழங்கீட்டுக் குறியீட்டை வெளியிட இருக்கின்றது.
- இந்தக் குறியீட்டில் வகைப்பாட்டை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
- இந்த வகைப்பாட்டில் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகியவை உள்ளடங்கும்.
-
Post Views:
671