மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நாட்டில் கல்விக்கான தரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திட டிஜிட்டல் பலகை நடவடிக்கை எனும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கல்வி கற்பதையும் கற்பித்தலையும் ஊடாடும் விதத்திலும், சுண்டி இழுக்கும் விதத்தில் கல்வி கற்பதை ஒரு வழிகாட்டும் நடைமுறையாக பிரபலப்படுத்துவதிலும் டிஜிட்டல் பலகை நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும்.
பள்ளிகளில் சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்கிட இத்திட்டம் கரும்பலகை நடவடிக்கை என்ற திட்டத்தின் மாதிரி வடிவில் துவங்கிடப் பட்டிருக்கின்றது.
உயர்கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக பல்கலைக்கழக மானியக்குழு இருக்கும்.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசானது பள்ளிகளில் இத்திட்டத்தை நிறைவேற்றும்.