டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட புதிய போர் கவச உடைக்கு அறிவுசார் சொத்துரிமை
November 24 , 2025 4 days 41 0
இந்திய இராணுவம் ஆனது டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட புதிய போர் கவச உடையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உடையானது, இராணுவ வடிவமைப்பு வாரியத்தின் ஆலோசனைத் திட்டத்தின் கீழ், புது டெல்லியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் (NIFT) வடிவமைக்கப்பட்டது.
இது சௌகரியம், எளிதான இயக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மேம்பட்ட தொழில்நுட்ப ஜவுளி நுட்பங்களுடன் கூடிய மூன்று அடுக்கு வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்தக் கவச உடையில் டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட நீடித்த வெளிப்புற கவச உடை, காப்பிடப்பட்ட உள் உறை மற்றும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிற்கான வெப்ப கடத்துத் திறன் கொண்ட அடுக்கு ஆகியவை அடங்கும்.
இராணுவம் ஆனது கொல்கத்தாவில் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமைக் கட்டுப்பாட்டு (CGPDTM) அமைப்பிடம் இந்த வடிவமைப்பைப் பதிவு செய்தது.
இந்தப் பதிவு, இந்தக் கவச உடையின் வடிவமைப்பு மற்றும் உருமறைப்பு முறை மீது இராணுவத்திற்குப் பிரத்தியேக அறிவுசார் சொத்துரிமைகளை (IPR) வழங்குகிறது.