TNPSC Thervupettagam

டிஜிட்டல் வானொலி ஒளிபரப்புக் கொள்கை

October 5 , 2025 14 days 48 0
  • தனியார் வானொலி ஒளிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒளிபரப்புக் கொள்கையை உருவாக்குவது குறித்தப் பரிந்துரைகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டது.
  • இந்தக் கொள்கையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு ‘A+’ வகை நகரங்களையும், பெங்களூரு, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட ஒன்பது ‘A’ வகை நகரங்களையும் உள்ளடக்கியது.
  • டிஜிட்டல் வழி வானொலிச் சேவைகள் ஆனது, ஒரு தொடர்முறை, மூன்று டிஜிட்டல் மற்றும் ஒரு தரவு தடத்தினை அனுமதிக்கின்ற ஒரே உள்ளடக்கத்தினைப் பல்வேறு தளங்களில் ஒளிபரப்புதல் முறையில் செயல்படும்.
  • இந்திய நாட்டிற்காக ஒரே அலைவரிசையில் ஒரே டிஜிட்டல் வானொலித் தொழில் நுட்பத்தை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் என்பதோடு 2023 ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் ஏலம் மூலம் அலைவரிசைகளையும் ஒதுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்