TNPSC Thervupettagam

டிஜிட்டல் வழி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027

September 12 , 2025 11 days 78 0
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது, இந்தியாவின் முதல் முழுமையான எண்ணிம வழி/டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக அமையும்.
  • சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் தங்கள் சொந்தத் திறன்பேசிகளைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிப்பார்கள்.
  • தரவுச் சேகரிப்புக்கு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் பிரத்யேக கைபேசி செயலிகள் பயன்படுத்தப்படும்.
  • கணக்கெடுப்பாளர்கள் செயலிகள் மூலம் நேரடியாக ஒரு மைய சேவையகத்தில் தரவை பதிவேற்றுவார்கள்.
  • கணக்கெடுப்பாளர் நிலையிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு எண்ணிம மயமாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • வீட்டு வசதிப் பட்டியலிடல் கட்டம் ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும்.
  • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்.
  • லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும்.
  • அனைத்து கட்டிடங்களுக்கும் டிஜிட்டல் வடிவமைப்புத் திட்டமிடல் மற்றும் GIS தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புவிசார் குறியீடுகள் வழங்கப்படும்.
  • நிகழ்நேரக் கண்காணிப்பு வலைத்தளம் மற்றும் 14,618.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ஆகியன இந்தியத் தலைமைப் பதிவாளரால் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்