மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது டிஜிலாக்கரை ஒரு தனித்த தேசியக் கல்விக் கருவூலமாகத் (NAD - National Academic Depository) தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த அமைச்சகமானது NADஐ டிஜிலாக்கர் என்ற திட்டத்தின் வரம்பிற்குள் ஒரு நிரந்தரத் திட்டமாகச் செயல்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
NAD ஆனது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் மூலம் டிஜிலாக்கரினால் பயனரிடம் எந்தவொரு கட்டணத்தைப் பெறாமல் ஒரு நிரந்தரத் திட்டமாக செயல்படுத்தப் படுகின்றது.
டிஜிலாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா என்ற முன்னெடுப்பின் கீழ் தொடங்கப் பட்டுள்ள மேகச் சேமிப்பு அல்லது கிளவுட் என்பதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பான நிகழ்நேர சேமிப்புச் சேவையாகும்.
இது ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டைகள், பான் அல்லது நிரந்தர கணக்கு எண் அட்டைகள், ஓட்டுநர் உரிமம், சொத்து தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றின் மின்னணுப் பதிப்புகளைச் சேமித்து அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பயனர்களை அனுமதிக்கின்றது.
இது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.