TNPSC Thervupettagam

டிஜிலாக்கர் ஒருங்கிணைப்பு விருதுகள்

May 20 , 2026 11 days 82 0
  • மாநிலத் தரவுகளுக்கான இணையப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த தேசிய ஆலோசனைக் கருத்தரங்கின் போது, சிறந்த டிஜிலாக்கர் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்காக ஐந்து மாநிலங்களுக்கு தேசிய மின்னணு-ஆளுமைப் பிரிவு (NeGD) பாராட்டுத் தெரிவித்தது.
  • டிஜிலாக்கர் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை விரிவுபடுத்தியதற்காக குஜராத், கர்நாடகா, கேரளா, நாகாலாந்து மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
  • கர்நாடகா 2.7 கோடிக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட பயனர்களுடன் அதிக எண்ணிக்கையிலான டிஜிலாக்கர் கணக்குகளைப் பதிவு செய்துள்ளதுடன், சுமார் 3 கோடி மின்சாரக் கட்டண ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.
  • குஜராத் தனது சேவைகளில் 65%-ஐ ஒருங்கிணைத்துள்ளதுடன், இலவச பேருந்துப் போக்குவரத்துப் பலன்களுக்காக டிஜிட்டல் மாற்றுத்திறனாளி சான்றிதழ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கேரளா ஏழு நாட்களுக்குள் 117-க்கும் மேற்பட்ட சேவைகளை இணைத்துள்ள அதே நேரத்தில் நாகலாந்து ஒரு மாதத்தில் 'வழங்குபவர் மற்றும் கோருபவர்' ஆகிய இரு மாதிரிகளின் கீழ் 32-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்துள்ளது.
  • ராஜஸ்தான் தனது குடும்பப் பதிவேடான ஜன் ஆதாரை டிஜிலாக்கருடன் இணைத்து உள்ள நிலையில் இதன் மூலம் 7.5 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் பயன் அடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்