இந்த மாதம் "டிப்போட் தர்பன்" (கிடங்கக அமைப்பு) இணைய தளம் மற்றும் கைபேசி செயலி வெளியிடப்பட உள்ளது.
உணவுச் சேமிப்புக் கிடங்குகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, அவை தரம் மற்றும் பாதுகாப்பின் மிக உயரிய தரநிலைகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்கிறது.
இது கிடங்கக மேலாளர்களுக்கு உள்கட்டமைப்பு, செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி செயல்திறனை நிகழ்நேரத்தில் கண்காணிக்க அதிகாரம் அளிக்கும்.
கிடங்கக உள்கட்டமைப்பில் புவிசார் குறியிடப்பட்ட தரவைப் பதிவேற்றுவதன் மூலம், மேலாளர்கள் தானியங்கு வழி மதிப்பீடுகள் மற்றும் மிகவும் சரியான நேரத்திலான மேம்பாடுகளுக்கான நடவடிக்கை எடுக்கக் கூடிய தகவல்களைப் பெறுவார்கள்.
இந்த முன்னெடுப்பானது, தோராயமாக சுமார் 2,278 கிடங்குகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இதில் இந்திய உணவுக் கழகம் (FCI), மத்தியக் கிடங்குக் கழகம் (CWC) மற்றும் அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்துப் பெறப்பட்டவை ஆகியவை அடங்கும்.