TNPSC Thervupettagam

டிரெக் தமிழ்நாடு முன்னெடுப்பு

November 5 , 2025 3 days 30 0
  • தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பான, வழி காட்டப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான மலையேற்ற அனுபவங்களை வழங்குவதற்காக ட்ரெக் தமிழ்நாடு முன்னெடுப்பு 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • கடந்த ஆண்டில், 1,400 மாணவர்கள் மற்றும் 150 சர்வதேசப் பார்வையாளர்கள் உட்பட 15,500 மலையேற்ற வீரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வனப் பாதைகளில் பயணம் மேற்கொண்டு இயற்கை அழகைக் கண்டு களித்தனர்.
  • மிகவும் பிரபலமான மலையேற்றப் பாதைகள் ஏலகிரி-சுவாமிமலை (2,209 மலையேற்ற வீரர்கள்), குடியம் குகைகள் (1,743), பரலியார் (982), பார்சன்ஸ் பள்ளத்தாக்கு-முகூர்த்தி பகுதி (835), மற்றும் அவலாஞ்சி-கோலாரிபெட்டா (729) ஆகியவையாகும்.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்றப் பாதைகளின் எண்ணிக்கையை 40 முதல் 50 ஆக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் (TTDC) இணைந்து ஒருங்கிணைந்தச் சுற்றுச்சூழல் சார் சுற்றுலா தொகுப்புகளைத் தொடங்க உள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, TTF சென்னை 2025 நிகழ்வில் 'மிகவும் பிரத்தியேக தயாரிப்பு விருது' மற்றும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2025 நிகழ்வில் 'சிறந்த சூழலியல் சுற்றுலா சேவை வழங்குநர் விருது' ஆகியவற்றைப் பெற்றது.
  • அனைத்து மலையேற்றங்களும் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சம நிலையை உறுதி செய்யும் வகையில், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்கு (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகளின் படி நடத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்