கேரளாவின் எலிமலாவில் உள்ள இந்தியக் கடற்படைப் பயிற்சி நிறுவனத்தில் “நாடுகளை கட்டமைப்பதில் கடல் ஆற்றலின் பங்கு” என்பது குறித்த டில்லி கடல் ஆற்றல் கருத்தரங்குத் தொடரின் ஆறாவது பதிப்பு நிறைவடைந்தது.
ஐ.என்.ஏ எலிமலா என்பது இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோர காவல் படையின் ஆரம்பகால அதிகாரிகளின் பயிற்சி நிறுவனமாகும்.
ஐ.என்.ஏ எலிமலா வளாகத்திற்குள் அமைந்துள்ள டில்லி மலையின் நினைவாக இதற்கு டில்லி கருத்தரங்குத் தொடர் என்று பெயரிடப் பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் ஐ.என்.ஏவில் நடத்தப் படுகின்றது.
இந்தக் கருத்தரங்கானது கடல் குறித்த துடிப்பான வரலாற்றை இளம் பயிற்சியாளர்களுக்கு வெளிப்படுத்துவதையும் மேலும் அவர்களிடம் அதை ஆராய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐ.என்.ஏவில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் ஆறாவது பதிப்பின் கருப்பொருள், ‘நாடுகளை கட்டமைப்பதில் கடல் ஆற்றலின் பங்கு’ என்பதாகும்.