டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு
September 17 , 2025
16 hrs 0 min
27
- எத்தனால்-டீசல் கலப்பு சோதனைகள் தோல்வியடைந்ததையடுத்து, டீசலுடன் 10% ஐசோபியூட்டனாலை கலப்பது குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது.
- தீப்பற்றும் பண்புகளைக் கொண்ட ஓர் ஆல்கஹால் கலவையான ஐசோபியூட்டனால், ஒரு தனி எரிபொருளாகவும் பரிசோதிக்கப்படுகிறது.
- ஐசோபியூட்டனால்-டீசல் கலப்புகளுக்கான சோதனைகளை இந்திய வாகன / ஆட்டோ மோட்டிவ் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு (ARAI) மேற்கொண்டு வருகிறது.
- வேளாண் பயன்பாட்டு இயந்திரங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் ஐசோபியூட்டனால் கலவை எரிபொருளின் பயன்பாடு குறித்து பரிசீலிக்கப் படுகின்றன.
Post Views:
27