பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது, 2027 ஆம் ஆண்டிற்குள் டீசல் எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குப் பரிந்துரைத்துள்ளது.
அதற்குப் பதிலாக மின்சார மற்றும் எரிவாயு ஆற்றலில் இயங்கும் வாகனங்களுக்கு அது மாறுமாறு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பல்வேறு நகரங்களுக்கு இது பொருந்தும்.
2070 ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு என்ற தனது ஒரு இலக்கினை அடைவதற்காக இந்தியா தனது 40% மின்சார உற்பத்தியினைப் புதுப்பிக்கவல்ல ஆற்றல்களிலிருந்துப் பெற வேண்டும்.
இந்தியாவின் ஆற்றல் பயன்பாட்டுச் சேர்க்கையில் தற்போது 6.2% ஆக உள்ள எரிவாயுவின் பங்கினை, 2030 ஆம் ஆண்டிற்குள் 15% ஆக உயர்த்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.