TNPSC Thervupettagam
September 21 , 2026 15 hrs 0 min 30 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுகளைப் பெறும் நான்கு பேரின் பெயர்களை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
  • ஒரே பருவத்தில் 8,000 மீட்டர் உயரமுள்ள ஐந்து சிகரங்களில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பல்ஜீத் கவுர் (இமாச்சலப் பிரதேசம்) நில சாகச விருதைப் பெற்றார்.
  • கூடுதல் ஆக்ஸிஜன் அல்லது ஷெர்பா ஆதரவின்றி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததற்காக ஸ்கால்சாங் ரிக்ஜின் (லடாக்) நில சாகச விருதைப் பெற்றார்.
  • தேசிய மற்றும் சர்வதேச பாரா-நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக ரிமோ சாஹா (மேற்கு வங்கம்) நீர் சாகச விருதைப் பெற்றார்.
  • குளிர்கால விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு மேம்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக சிவ பிரசாத் சாமோலி (உத்தரகண்ட்) வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்