டெப்ரிகார் வனவிலங்கு சரணாலயம்
September 8 , 2025
16 hrs 0 min
34
- ஒடிசாவின் டெப்ரிகார் வனவிலங்கு சரணாலயமானது இந்தியாவின் புதிய புலிகள் வளங்காப்பகமாக மாற உள்ளது.
- இந்தச் சரணாலயத்தில், 670 ஆக இருந்த இந்தியக் காட்டெருமைகளின் எண்ணிக்கை ஆறு மாதங்களில் 700க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
- இரை இனங்களில் காட்டெருமை, சம்பார் மான், புள்ளிமான், காட்டுப்பன்றி மற்றும் காட்டு நாய்கள் ஆகியவை அடங்கும்.
- டெப்ரிகர் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஹிராகுட் ஈரநிலத்தின் எல்லையாக உள்ளது.
- இந்தச் சரணாலயம் ஈரநிலங்கள் மற்றும் புல்வெளிகள் முதல் காடுகள் வரையிலான பல்வேறு வாழ்விடங்களை கொண்டுள்ளது.
- இது 120 வலசை வந்த இனங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பறவை இனங்களைக் கொண்டுள்ளது.
Post Views:
34