டெரகோட்டா (சுடுமண்) அரைக்கும் இயந்திரம் (கிரைண்டர்) - வாரணாசி, உத்தரப் பிரதேசம்
September 4 , 2019 2336 days 858 0
காதி மற்றும் கிராம தொழிற் துறை ஆணையமானது (Khadi and Village Industries Commission - KVIC) முதன்முறையாக ‘டெரகோட்டா கிரைண்டரை’ உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சேவாபுரியில் வெளியிட்டது.
இந்த இயந்திரமானது மட்பாண்டத் தயாரிப்பில் பொருள்களை மீண்டும் பயன்படுத்துவதற்காக வீணான மற்றும் உடைந்த மட்பாண்டப் பொருட்களை அரைக்கும்.
இது டெரகோட்டாப் பொருட்களின் உற்பத்தி செலவைக் குறைக்கும் என்றும் குயவர்களின் வருமானத்தை ஈடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.