முக்கியமான பாதுகாப்பு மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக இந்திய இராணுவமானது டெரியர் சைபர் குவெஸ்ட் 2025 என்ற நிகழ்வினைத் தேசிய அளவிலான சவாலாக அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்வை இந்திய இராணுவம், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய இராணுவ ஆராய்ச்சி மையம் (IARC) மற்றும் சைபர்பீஸ் ஆகியவை இணைந்து புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளன.
மாதிரி உருவகப்படுத்தப்பட்ட இராணுவச் சூழலுக்குள் BOSS லினக்ஸில் (பாரத் இயக்க முறைமைத் தீர்வுகள்) பாதிப்புகளைக் கண்டறிவதில் இந்த 36 மணி நேரப் பிழை கண்டறியும் ஆய்வு சவாலில் கவனம் செலுத்துகிறது.