டெர்பி வான் – வான் கண்ணுறு தொலைவிற்கு அப்பாலான ஏவுகணை
May 3 , 2018 2578 days 869 0
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜஸ், டெர்பி என்ற (வான் – வான்) கண்ணுறு தொலைவிற்கு அப்பாலான ஏவுகணையை கோவா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனையானது, ஒரு திறனான ஒலியை விட வேகமாக செல்லும் போர் விமானம் எனும் வகையில் தேஜஸின் ஒட்டு மொத்த திறனையும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
தேஜஸ் ஆனது HAL (Hindustan Aeronautics Limited) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
டெர்பி என்பது, சிறு முதல் நடுத்தர அளவிலான கண்ணுறு பகுதியைத் தாண்டிய வானிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை ஆகும். இது ஒரு இருபயன்பாட்டு (வானிலிருந்து வானிலுள்ள இலக்கைத் தாக்கும், தரையிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும்) ஏவுகணையாகும்.
டெர்பி, இஸ்ரேலிய போர்த்தளவாட மேம்பாட்டு நிறுவனமான ரஃபேல் மற்றும் இஸ்ரேல் வானூர்தி தொழிற்சாலை MBT ஆகியவற்றின் கூட்டிணைவால் தயாரிக்கப்பட்டது.
கீழ்நோக்கிய பார்வை மற்றும் கீழ்நோக்கிய தாக்குதல் ஆகிய திறமைகளைக் கொண்டுள்ள டெர்பி, ஏவுதல் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் (Fire and Forget) நிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்னணு எதிர் நடவடிக்கைகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக கொண்டுள்ளது.