பருவநிலை குறித்து கவனம் செலுத்துவதில் இந்திய வணிக நிறுவனங்கள் 5வது இடத்தில் உள்ளன.
‘டெலாய்ட் CXO (முதன்மை அனுபவ அதிகாரி) நிலைத்தன்மை அறிக்கை 2022 : குறிக்கோள் மற்றும் தாக்கத்திற்கு இடையிலான துண்டிப்பு’ என்ற ஒரு அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது டெலாய்ட் ட்ச் டோமாட்ச லிமிடெட் என்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது.
இந்த நிறுவனமானது டெலாய்ட் குளோபல் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த அறிக்கையானது, பருவநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்து வணிகத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் கவனத்தினை மதிப்பிடுகிறது.
மேலும், ஒரு நிறுவனத்தின் குறிக்கோளுக்கும் அதன் தாக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு துண்டிப்பினைப் பற்றி ஆய்வு செய்தல் மற்றும் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் முதன்மை அனுபவ அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றியும் இந்த அறிக்கையானது ஆய்வு செய்கிறது.