காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடல் அரிப்பு, நிலப்பகுதி மூழ்குதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை லூசியானா காடுகளை அழிக்கின்றன.
லூசியானா காடுகள் அமெரிக்காவின் மிசிசிபி நதியின் டெல்டா (ஆற்றிடைப்பகுதி) பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
நாசாவின் அறிவியலாளர்கள் மற்றும் போஸ்டன் முதல் கலிஃபோர்னியா வரையிலான பல்கலைக் கழகங்களின் அறிவியலாளர்கள் இதற்காக வேண்டி கணினி மாதிரிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கணினி மாதிரிகள் செயற்கைக் கோள் தரவுகளைக் கொண்டு குறைந்து வரும் டெல்டாக்களின் எந்த பகுதிகளை உயர்த்தலாம் என்றும் எந்தப் பகுதியானது அந்த நிலையைக் கடந்து விட்டது என்றும் அறிந்து கொள்ள உதவும்.