காற்று மாசுக் கணிப்பு மற்றும் மூலப் பகுப்பாய்வை மேம்படுத்துவதற்காக டெல்லி-NCR பகுதிக்கான ஒருங்கிணைந்த வளிமண்டல வேதியியல் மற்றும் ஏரோசோல்/காற்று மாசுப்படலம் நச்சுத்தன்மை பகுப்பாய்வு ஆய்வகத்தை (AATAL) மத்திய அரசு திறந்துள்ளது.
AATAL என்பது டெல்லி-NCR பகுதிக்கான காற்று மாசு பகுப்பாய்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் வசதியாக விவரிக்கப் படுகிறது.
இது PM2.5, உலோகங்கள், நச்சு கூறுகள், வளிமண்டல வாயுக்கள் மற்றும் ஏரோசோல்களை பகுப்பாய்வு செய்கிறது.
மௌசம் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த வசதியானது, IITM-இன் AIRWISE (காற்றின் தரம் குறித்த எச்சரிக்கை மற்றும் உமிழ்வுகளுக்கான ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு) அமைப்புடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இலக்கு வைக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக காற்றின் தர முன்னறிவிப்புகள், அவதானிப்புகள் மற்றும் மூலப் பகிர்வுத் தரவு ஆகியவற்றை AIRWISE இணைக்கிறது.