TNPSC Thervupettagam

டெல்லி காடு வளர்ப்புத் திட்டம்

July 14 , 2026 12 days 92 0
  • பசுமை செயல் திட்டம் 2026-27 ஆம் ஆண்டின் கீழ் ‘திட்டம் 70 லட்சம் மரம் நடும் பிரச்சாரம்' மற்றும் 'டெல்லி மலைமுகடுப் புத்துயிர் பிரச்சாரம்' ஆகியவற்றை டெல்லி தொடங்கியது.
  • இந்தப் பிரச்சாரம் டெல்லி முழுவதும் 70 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மலைமுகடு மறுசீரமைப்புத் திட்டம் 2030 ஆம் ஆண்டிற்குள் 6,303.55 ஹெக்டேர் பரப்பளவில் 1 கோடி நாட்டு மரக் கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • ஆரவல்லி மலைத் தொடரின் ஒரு பகுதியான டெல்லி மலைமுகடு, ஆக்கிரமிப்புத் தாவரமான சீமைக்கருவேல மரங்களை (விலையாதி கீகர் - ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா) அகற்றிவிட்டு, வேம்பு, அரசு, ஆல் மற்றும் நாவல் போன்ற நாட்டு மர வகைகளை நடுவதன் மூலம் சூழலியல் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும்.
  • 70-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுத்தல், ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகளைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் தொல்பொருள் கட்டமைப்புகளை மீட்டெடுத்தல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.
  • மரம் நடுவதற்கான நேரத்தை முன்பதிவு செய்தல், மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நாற்றங்கால் தகவல்கள் மூலம் குடிமக்கள் பங்கேற்பதை பசுமை இயக்க இணைய தளம் செயல்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்