75 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'டெல்லி சுவர்' என்ற ஒரு சுவரோவியத்தினை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்தச் சுவரோவியத்தில் முகலாயர் காலத்துச் செங்கோட்டை முதல் ஆங்கிலேயர் காலத்து இந்தியா கேட் வரையிலும், பாராளுமன்றக் கட்டிடம் முதல் தேசியப் போர் நினைவுச் சின்னம் வரையிலும், அனைத்துப் பிரிவு ஓவியங்களும் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.