டெல்லி அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது டெல்லியை முதல் முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் முழு வங்கி, ரொக்கம் மற்றும் கடன் மேலாண்மை கட்டமைப்பின் கீழ் கொண்டுவருகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி டெல்லியின் வங்கியாளர், கடன் மேலாளர் மற்றும் நிதி முகவராக செயல்படும்.
இந்தக் கட்டமைப்பு மாநில மேம்பாட்டுக் கடன்கள் மூலம் சந்தைக் கடன்கள், உபரி பணத்தின் தானியக்க முதலீடு மற்றும் குறைந்த விலைப் பணப்புழக்க வசதிகளை அணுக அனுமதிக்கிறது.
தொழில்முறைப் பண மேலாண்மை நடைமுறைகள் செயல்திறனை மேம்படுத்தச் செய்வதோடு கடன் வாங்கும் செலவுகளையும் குறைக்கும்.
இந்த முன்னெடுப்பு டெல்லியின் நிர்வாகத்தில் நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துகிறது.