குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரச் சட்டமானது, 1991 ஆம் ஆண்டு டெல்லி தேசியத் தலைநகரப் பகுதி அரசாங்கச் சட்டத்தினை (NCT) திருத்தியமைக்க முயல்கிறது.
இது துணைநிலை ஆளுநரை டெல்லி அரசின் நிர்வாகியாக நியமிக்கிறது.
டெல்லி நகர அரசாங்கத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் இடமாற்றம் குறித்து அவரே இறுதி முடிவை வழங்குவார்.
சட்டங்களை இயற்றுவதற்கும், டெல்லி அரசாங்கத்தில் ஆட்பேருரிமையுடன் நியமிக்கப் பட்ட அதிகாரிகள் மீதான தனது அதிகாரக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கிய மே 11 ஆம் தேதியன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை இது மாற்றுகிறது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால், துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்றும் இந்த அவசரச் சட்டம் கூறியுள்ளது.
இந்த அவசரச் சட்டமானது, முதன்முறையாக தேசியத் தலைநகர் ஆட்சிப் பணி ஆணையத்தை (NCCSA) நிறுவ முயல்கிறது.
டெல்லி முதலமைச்சர் அவர்கள், டெல்லியின் தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறைச் செயலாளர் ஆகிய இரு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார்.