புதுதில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பிரகடனம் செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகத்திற்கான ஏழு கொள்கைகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இது AI அமைப்புகளில் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயத் தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மை, மனித கண்ணியம் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்கிறது.
இது, ஒரு நாடு அதன் எல்லைகளுக்குள் உருவாக்கப்படும் தரவுகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள தரவு இறையாண்மையை ஆதரிக்கிறது.
இது ஆதார் (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம்) மற்றும் UPI (ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம்) போன்ற டிஜிட்டல் பொது உள் கட்டமைப்பு (DPI) ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது.
இது AI அமைப்புகளின் ஆற்றல் நுகர்வைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் தூய்மையான AI-ஐயும் ஊக்குவிக்கிறது.