November 2 , 2025
3 days
45
- மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் டெல்லியின் மேக விதைப்புச் சோதனை ஒத்தி வைக்கப் பட்டது.
- கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) ஆனது, ஈரப்பத அளவு சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை இருந்ததாக தெரிவித்துள்ளது.
- அக்டோபர் 28 ஆம் தேதியன்று புராரி, கரோல் பாக், மயூர் விஹார் மற்றும் பத்லி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டெல்லியில் மழைப் பொழிவு ஏற்படவில்லை.
- இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் குறைந்த பட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
- கண்காணிப்பு நிலையங்களில் PM2.5 மற்றும் PM10 செறிவுகளில் 6 முதல் 10 சதவீதம் குறைவு பதிவாகின.
- குறைந்த ஈரப்பதச் சூழல்களிலும் மேக விதைப்பு முடிவுகள் பயன் மிக்க தரவை வழங்குவதாக IIT-கான்பூர் தெரிவித்துள்ளது.

Post Views:
45